சென்னை, கோடம்பாக்கம், ஆண்டவர் நகரைச் சேர்ந்தவர் சரஸ்வதி(52). இவர் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த சரஸ்வதி, மாலை 3 மணியளவில், நீதி மன்றத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி இருக்கையிலிருந்து விழுந்து இறந்தார். இச்சம்பவம், நீதிமன்றஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago