தடை செய்யப்பட்ட - இரட்டைமடி வலைகளை பயன்படுத்தினால் நடவடிக்கை : மீனவர்களுக்கு தஞ்சை ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்பிடித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தெரிவித்துள்ளது: தஞ்சாவூர் மாவட்ட கடற்கரை 45 கி.மீ நீளமுடையது. மாவட்டத்தில் 27 மீனவ கிராமங்கள் உள்ளன. 161 விசைப்படகுகளும் 1,655 நாட்டுப்படகுகளும் இயங்கி வருகின்றன.

இம்மாவட்டத்தில் சில மீன்பிடி விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தியும், 5 நாட்டிக்கல் கடல் மைல்களுக்குள்ளும் மீன்பிடிப்பு செய்வதாக நாட்டுப் படகு மீனவர் சங்கங்களிடமிருந்து தொடர்ந்து புகார் பெறப்பட்டு வருகிறது.

எனவே, தவறிழைக்கும் விசைப்படகுகளை கண்காணிக்க வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மீன்வளத் துறை அடங்கிய குழு அமைக்கப்பட்டு கடலிலும், கரையிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்ட விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை எக்காரணம் கொண் டும் பயன்படுத்தக்கூடாது. கரை யிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் களுக்குள் மீன்பிடிக்கக் கூடாது. இதை மீறி செயல்படும் விசைப் படகு உரிமையாளர்கள் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டம் 1983-ன் படி வழக்கு பதிவு செய்யப் பட்டு அபராதத் தொகை விதிக் கப்படுவதுடன், தடை செய்யப் பட்ட வலைகளும் பறிமுதல் செய் யப்படும் என எச்சரிக்கப்படுகிறது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE