இரும்பு வியாபாரி கோடிக்கணக்கில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு - ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் : 6 இடங்களில் அமலாக்க பிரிவினர் சோதனை :

By செய்திப்பிரிவு

திமிரி இரும்பு வியாபாரி கோடிக் கணக்கில் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு தொடர்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் அதிகாரிகள் குழுவினர் 6 இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் (56). பழைய இரும்பு வியாபாரி. இவர், அதே பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது ஜி.எஸ்.டி வரி தாக்கலில் போலி நிறுவனங்கள், பில்கள் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை ஜி.எஸ்.டி அமலாக்கப் பிரிவு உயர் அதிகாரிகள் 30 பேர் அடங்கிய குழுவினர் பல குழுக்களாக பிரிந்து தங்கராஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, திமிரியில் உள்ள அவரது வீடு, கடைகள், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பேரணாம்பட்டு மற்றும் திருப்பத்தூர் என தங்கராஜிக்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனையை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனை சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில், வரிஏய்ப்பு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் வரி ஏய்ப்பு மட்டும் கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. விசாரணைக்காக தங்கராஜ் அழைக்கப்படுவார் என சோதனைக்கு வந்திருந்த அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்