திருப்பூர் சிவன் திரையரங்க சாலை அருகே பச்சிளம் பெண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் கிடப்பதாக கடந்த 29-ம் தேதி கிடைத்த தகவலின்பேரில் போலீஸார் மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அந்த குழந்தைக்கு மகிளினி என்று பெயரிடப்பட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் பெறப்பட்டது.
குழந்தையின் எதிர்கால நலன் கருதி, பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக, குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நாமக்கல் மாவட்டம் ‘பராமரிக்கும் கரங்கள்' எனும் தத்துவள மையத்திடம் தற்காலிக பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக குழந்தையை நேற்று ஒப்படைத்தனர். குழந்தை குறித்து அறிந்தவர்கள், 30 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கவும். அவ்வாறு தொடர்புகொள்ளாதபட்சத்தில், சட்டப்படி குழந்தை தத்து கொடுக்கப்படும்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் 6-வது தளம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் 0421-2971198 அல்லது திருப்பூர் - தாராபுரம் சாலை கரட்டாங்காடு பேருந்து நிறுத்தம் 220, குழந்தைகள் நலக்குழு - 0421-2424416, நாமக்கல் திருச்செங்கோடு எமப்பள்ளி அஞ்சல், 2யு பெருமம்பாளையம் ‘பராமரிக்கும் கரங்கள்’ சிறப்பு தத்தெடுப்பு மையம் - 6369068820, 9843150255 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என, குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago