தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகார்கள் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், பல்லடம், காமநாயக்கன்பாளையம் போலீஸார் இணைந்து கரடிவாவி, கே.என்.புரம், பெரும்பாளி, காரணம்பேட்டை ஆகிய பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கரடிவாவியிலிருந்து அப்பநாயக்கன்பட்டி செல்லும் சாலையில் பயன்பாடற்ற தறிக் கிடங்கில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான சுமார் 6 டன் புகையிலை பொருட்கள் கொண்ட மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல, காரணம்பேட்டை, பெரும்பாளி, கே.என்.புரம் ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தினர். மொத்தமாக சுமார் 10 டன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாகவும், 6 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago