பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்புடிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை வருகிற 23-ம்தேதிக்கு விழுப்புரம் நடுவர் நீதி மன்றம் தள்ளி வைத்துள்ளது.
எஸ்.பி-யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள் ளார். அப்போது அந்த பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி, பாலியல் தொந்தரவில் ஈடு பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப் பட்டார். அவர் மீது சிபிசிஐடி போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண் டனர்.
இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றம் எண் 2ல், நடுவர் முன்பு அந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஆஜராகி, வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 29-ம் தேதி சிபிசிஐடி போலீஸார் விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கு கடந்த 9-ம் தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு டிஜிபி, இவ் வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் எஸ்பி ஆகியோர் ஆஜராயினர். அவர்களுக்கு நடுவர் மன்றம் குற்றப்பத் திரிக்கை நகல் வழங்கி, வழக்கை 16-ம் தேதிக்கு (நேற்று) தள்ளி வைத்தது.
இதற்கிடையே, இடைநீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர் பாக மனு ஒன்றைத் தாக்கல் செய் துள்ளார். இம்மனுவை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வுகடந்த 13-ம் தேதி விசாரித்தது.
தனது வழக்கை ஆந்திராவில் உள்ள நெல்லூர் சிறப்பு மாஜிஸ் திரேட் நீதிமன்றத்துக்கு அல்லது தமிழகத்துக்கு வெளியே உள்ள வேறு எந்த நீதிமன்றத்துக்கும் மாற்ற அம்மனுவில் சிறப்பு டிஜிபி விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் 18-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இத்தகவலை நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரி வித்தார். இதற்கிடையே சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படும் எஸ்பி ஆகியோர் தரப்பில் வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்குகேட்டு மனுத்தாக்கல் செய்யப் பட்டது.
இதையடுத்து, இவ்வழக்கு விசாரணையை குற்றவியல் நடுவர் மன்ற நடுவர் கோபிநாதன் வருகிற 23-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago