சிவகங்கை அருகே உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி, வியாபாரிகளிடம் அபராதத் தொகையை வசூலித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டை கடை வீதிக்கு ஆக.13-ல் 39 வயதுள்ள ஒருவர் வந்துள் ளார். அவர் தன்னை உணவு பாதுகாப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு, கடைகளில் உள்ள உணவுப் பொருட்களை சோதனையிட்டார். பிறகு உணவு பொருட்களில் தர மில்லை எனக் கூறி வியாபாரி களிடம் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதத் தொகை செலுத்துமாறு கேட்டுள்ளார்.
அவர்கள் அளித்த பணத் துக்கு ரசீதும் கொடுத்துள்ளார். மேலும் சிலரிடம் உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக ரூ.5,000 பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் சோதனை நடத்தியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வியாபாரிகள் அந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். இதில், அவர் அதிகாரி இல்லை என்பது தெரியவந்தது. அவரை போலீஸாரிடம் வியா பாரிகள் ஒப்படைத்தனர். சிவ கங்கை தாலுகா போலீஸார் விசாரித்ததில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டம், காரடர்ந்தகுடியைச் சேர்ந்த சக்திவேல் (39) என்பது தெரிய வந்தது.
ஏற்கெனவே, இதேபோல் பல பகுதிகளில் போலி உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக நடித்து பணம் வசூலித்துள்ளதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago