திருப்பத்தூர் நகர் பகுதியில் எஸ்.பி., தனிப்பிரிவு காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாணியம்பாடி அடுத்த மிட்டூர்பகுதியில் இருந்து திருப்பத்தூர் வழியாக கர்நாடகா நோக்கிச்சென்ற மினி வேனை காவல் துறையினர் மடக்கி சோதனையிட்டபோது, அதில் 5 டன் ரேஷன் அரிசி கர்நாடகா மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த காவல் துறையினர் திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், அரிசி கடத்தலில் ஈடுபட்ட திருப்பத்தூர் அடுத்த பசிலிகுட்டை பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் நாராயணன் (29), நாட்றாம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்த கிளீனர் ஹரீஷ் (30) ஆகிய 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago