திருவண்ணாமலை மாவட்டத்தில் - 25 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு : அணுக்குமலையில் ஆட்சியர் பா.முருகேஷ் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின.

திருவண்ணாமலை மாவட் டத்தில் நெல் அறுவடை தீவிர மடைந்துள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் குறைந்த விலையில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், 75 கிலோ எடையுள்ள ஒரு மூட்டைக்கு 600 ரூபாய் வரை இழப்பு ஏற் பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பயனாக, திருவண்ணா மலை மாவட்டத்தில் 25 இடங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கின. கீழ்பென் னாத்தூர் வட்டம் அணுக்குமலை ஊராட்சியில் நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை ஆட்சியர் பா.முருகேஷ் திறந்து வைத்தார்.

அப்போது அவர் கூறும்போது, “அணுக்குமலை நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் 30 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ள சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,958-ம், பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.1,918-ம் கொள்முதல் செய்யப் படும். நெல் கொள்முதல் தொகையை, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்” என்றார்.

இதில், திருவண்ணாமலை மாவட்ட நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் கோபி நாத், வேளாண் இணை இயக்குநர் முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்