ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடைபெற்றகூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் பேசும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த வேண்டும். இந்தப் பணியில் சுணக்கம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு கொசு ஒழிப்புப் பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.இந்தப் பணியை முறையாக செய்யாத கொசு ஒழிப்புப் பணியாளர்களை கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago