குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே உள்ள பாறைக்குழிகளில் மாநகராட்சியினர் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் கனியாம்பூண்டி மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளில் ஏராளமான தொழில் நிறுவனங்களும் செயல்படுகின்றன. இதில் கனியாம்பூண்டியிலிருந்து ராக்கியாபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடுத்தடுத்து 4 பாறைக்குழிகள் உள்ளன. இதில், திருப்பூர் மாநகரில் சேகரமாகும் குப்பையை கொட்டி பராமரிப்பு செய்ய, மாநகராட்சி சார்பில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதையறிந்த கனியாம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், பாறைக்குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமுருகன்பூண்டி காவல் நிலைய போலீஸா பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீஸார் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அனைவரும் கலைந்துசென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago