இண்ட்கோ சர்வ் உத்தரவின் பேரில்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை இலை சேகரிப்பில் மாற்றம்செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம்சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 30 நிர்ணயிக்க வேண்டும் என்பது கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகசிறு தேயிலை விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.குன்னூர் இண்ட்கோசர்வ் அறிவுறுத்தல்படி, மாவட்டத்தில்செயல்பட்டு வரும் கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலை நிா்வாகங்கள், தங்களது உறுப்பினா்களை இரண்டு இலை, ஒரு கொழுந்து இலையை விநியோகிக்க முயற்சிக்க வேண்டும் என விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளன.
இதன் எதிரொலியாக இலை சேகரிப்பு மையங்களில் தரம் குறைந்தஇலை நிராகரிக்கப்படுவதால், உறுப்பினர்களுக்கும், தொழிற்சாலை நிர்வாகத்துக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
கூட்டுறவுத் தொழிற்சாலை நிர்வாகம் திடீரென ‘டூ லீஃப், ஒன் பட்’ என்ற முறையில் இலை விநியோகிக்க வேண்டும் என நிர்பந்தம் செய்வதால் பெரும்பாலான இலைகள் வீணாகின்றன. குச்சி, செங்காம்பு, கரட்டு இலைகளை நீக்கி வழக்கம்போல தரமான இலையை கொள்முதல் செய்ய வேண்டும் என கூட்டுறவு தேயிலை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.
இதுகுறித்து தொழிற்சாலை அதிகாரிகள் கூறும் போது, ‘‘இண்ட்கோசர்வ் உத்தரவின்படி, தனியாரின் தேயிலைத் தூளுக்குஇணையாக கூட்டுறவு தொழிற் சாலைகளின் தூள் உற்பத்தியை தரம் உயா்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றனா்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago