நியாயவிலைக் கடைகளுக்கு தாமதமின்றி உதவியாளர்களை நியமிக்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சிஐடியு) மகாசபைக்கூட்டம், பல்லடத்தில் நடைபெற்றது.மாவட்ட தலைவர் கே.மகேந்திரன்தலைமை வகித்தார். சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் கே.உமாசந்திரன் தொடங்கி வைத்தார்.மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஈஸ்வரமூர்த்தி உட்பட பலர் பேசினர்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் சங்க செயலாளர்களை, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணி மாறுதல் செய்ய வேண்டும், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் விற்பனையாளராக பணிபுரிந்து, கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்த கதிர்வேல் என்றஊழியருக்கு இதுவரை எந்தவிதபணப்பயன்களும் வழங்கப்படாமல் இருப்பதையும், வாரிசுக்குவேலை கொடுக்காமல் இழுத்தடிப்புசெய்து வருவதையும் கண்டிக்கிறோம்.

நியாயவிலைக் கடை பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, கடந்த ஆட்சியில்வழங்கியதைபோலவே சிறப்பு பயணப்படி ரூ.5 ஆயிரத்து 200வழங்க வேண்டும். அனைத்துநியாயவிலைக் கடைகளுக்கும் காலதாமதமின்றி உதவியாளர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மாவட்ட தலைவராக பி.கெளதமன், பொதுச் செயலாளராக கே.மகேந்திரன், பொருளாளராக பி.சுரேஷ் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்