இந்திய தொழில் கூட்டமைப்பு, தனியார் மருத்துவமனை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்துக்கு உட்பட்ட முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆட்சியர் சு.வினீத் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, "இந்த முகாமில் 1,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு தளர்வுகள் அளித்துவிட்டது என இருக்காமல், ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள், 84 நாட்களுக்கு பின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும்" என்றார்.
காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago