கிருஷ்ணகிரியில் 18 இடங்களில் கண்காணிப்பு கேமரா : குற்றங்களை தடுக்க நடவடிக்கை என எஸ்பி தகவல்

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில் குற்றங்களை தடுக்கும் வகையில் 18 இடங்களில் 66 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என எஸ்பி சாய் சரண் தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும், கிருஷ்ணகிரி ரவுண்டானா பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு ஏடிஎஸ்பி ராஜூ, டிஎஸ்பி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தனியார் பங்களிப்புடன் அமைக்கப் பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு அறையை எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகரில் பெங் களூரு சாலை, சென்னை சாலை, சப்-ஜெயில் ரோடு, சேலம் சாலை உள்ளிட்ட 18 இடங்களில் 66 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் விபத்து மற்றும் குற்றச்சம்பங்கள் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களுக்கு உதவ காவல்துறை எந்நேரமும் தயார் நிலையில் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

டிஎஸ்பி சரவணன் கூறும்போது, “கிருஷ்ணகிரியில் மேலும் பல இடங்களில் விரைவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படும்” என்றார். இந் நிகழ்ச்சியில், இன்ஸ்பெக்டர்கள் கபிலன், சரவணன், எஸ்ஐ சிவசுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்