காஞ்சிபுரம் மாவட்டத்தில்ரூ.2,821 கோடி கடன் வழங்க இலக்கு :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வங்கியாளர்கள் கூட்டம் நேற்றுநடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமை தாங்கினார்.இந்தக் கூட்டத்தில் 2021-22-ம்நிதி ஆண்டுக்கான வருடாந்திர கடன் திட்ட நகலை இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் மதி வெளியிட்டார்.

மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில் தயாரிக்கப்பட்ட 2021-22-ம்ஆண்டுக்கான கடன் திட்டத்தில் 2,821.27 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில் 1,260.96 கோடி விவசாயத்துக்கும், ரூ.856.51 கோடிசிறு, குறு தொழில் முனைவோருக்கும், ரூ.704.40 கோடி வீட்டுவசதி, கல்விக் கடன், இதர முன்னுரிமை கடன்களுக்கும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்