செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் - நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: 294 மூட்டைகள் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

செஞ்சி அருகே சத்தியமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 294 நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல், வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதை தடை செய்ய வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து செஞ்சி அருகே சத்தியமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து சத்தியமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்தில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனா , செஞ்சி வட்டாட்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு செய்தனர். அப்போது 294 நெல் மூட்டைகள் (சன்னரகம்) கடந்த 15 நாட்களுக்கு மேலாக எவ்வித ஆவணங்களின்றி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனா விழுப்புரம் குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறைக்கு புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வருவாய்த் துறையினர் 294 நெல் மூட்டைகளையும் லாரியில் ஏற்றி செஞ்சி ஒழுங்குமுறை விற்பணை கூடத்தில் வைத்து சீல் வைத்தனர்.

இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ஷீனாவிடம் கேட்டபோது, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடை பெற்றுவருகிறது. ஆய்வு முடிவு ஆட்சியருக்கு அறிக்கையாக அனுப்பிவைக்கப்படும் என்றார்.

294 நெல் மூட்டைகள் (சன்னரகம்) கடந்த 15 நாட்களுக்கு மேலாக எவ்வித ஆவணங்களின்றி இருப்பது கண்டறியப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்