தருமபுரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பழங் குடியினருக்கு தொழில் பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், 2019-20-ம் ஆண்டுக்கான திட்டத்தின் கீழ் 50 பயனாளிகளுக்கு கேட்டரிங் பயிற்சி அளிக்க ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தருமபுரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் பழங்குடியினர் சாதிச் சான்று, கல்விச் சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை, ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் இயங்கும் மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில், வரும் 30-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago