ஹூண்டாய் என் லைன் கார்கள் இந்த ஆண்டு அறிமுகமாக உள்ளன. முதலாவது என் லைன் மாடலாக ஹூண்டாய் ஐ20 பிரிமியம் ஹேட்ச் பேக் கார் செப்டம்பரில் களமிறக்கப்பட உள்ளது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 118 பிஎச்பி பவரையும், 172 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஐஎம்டி கியர்பாக்ஸ் அல்லது 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் கியர்பாக்ஸ் கொடுக்கப்படும்.
கம்பீர முகப்பு, எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 10.25 அங்குல தொடு திரையுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், சன்ரூப், புளூலிங்க் கனெக்ட்டிவிட்டி, பின்பக்கமும் ஏசி காற்று வரும் வசதி, ஏபிஎஸ் பிரேக் கிங் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல் ஆகியவை இதன் சிறப்பங்களாகும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி எஸ்.எஸ்.கிம் கூறும்போது, “என் லைன் கார்களை ஓட்டுவது மகிழ்ச்சியான அனுபவத்தை தரும். வாடிக்கையாளர்கள் புதுமையான அனுபவத்தை பெறலாம். ஸ்போர்ட்டி தோற்றம், நவீன தொழில்நுட்பம் அனைவரையும் கவரும்“ என்றார்.
இதன் விலை ரூ.12 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago