பழவேற்காடு ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு எரியில் படகில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அவ்வப்போது படகு சவாரி தொடர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் சென்னை, திருமங்கலம் பகுதியை சேர்ந்த லலித்(17) மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் நேற்று காரில் பழவேற்காடுக்கு வந்தனர். அவர்கள், படகு சவாரி சென்று, முகத்துவாரம் அருகில் உள்ள நண்டு பாடு திட்டில் இறங்கி, ஏரியில் குளித்தனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக லலித் நீரில் மூழ்கினார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த பொன்னேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவ கிராம மக்கள் லலித்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரத்துக்கு பிறகு லலித் சடலமாக மீட்கப்பட்டார்.

திருப்பாலைவனம் போலீஸார் லலித்தின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்