கடைகள் அகற்றப்பட்டதை கண்டித்து - சிஐடியூ சாலையோர வியாபாரிகள் புதுவை சட்டப்பேரவை நோக்கி பேரணி :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் அகற்றினர்.

இந்நிலையில் நேற்று புதுச் சேரி பிரதேச சாலையோர வியாபாரிகள் சங்கம் (சிஐடியூ) சட்டப்பேரவையை முற்றுகையிட பேரணியாக வந்தனர். அவர்களை மிஷன் வீதி வ.உ.சி பள்ளி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து அதிகாரிகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க சிறப்பு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். தலைவர் அழகர் ராஜ், பொதுச் செயலாளர் வடிவேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மார்க்சிஸ்ட் பிரதேச செய லாளர் ராஜாங்கம், சிஐடியூ மாநில செயலாளர் சீனுவாசன், மதிவாணன் உள்ளிட்டோர் கண் டன உரையாற்றினர். பின்னர் சட்டப்பேரவை சென்று முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்