அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை பின்பற்றாமல் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப் படிப்பை நடத்த முடியாது எனசென்னை உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், தொலைதூரக் கல்வி மூலம் 3 ஆண்டுகள் மற்றும்2 ஆண்டுகளுக்கான சட்டப்படிப் புகளை நடத்த தடை விதிக்கக் கோரி வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தொலைதூரக்கல்வி மூலம் சட்டப்படிப்பை வழங்கஅண்ணாமலை பல்கலைக்கழகத் துக்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர் வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அகில இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் தொலைதூரக்கல்வி மூலம் சட் டப்படிப்பை அண்ணாமலைப் பல் கலைக்கழகம் நடத்தி வருவதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
அதேபோல அகில இந்திய பார்கவுன்சில் தரப்பில், இவ்வாறு தொலைதூரக்கல்வி மூலமாகசட்டப்படிப்புகளை நடத்த அண் ணாமலைப் பல்கலைகழகத்துக்கு உரிமையோ, அதிகாரமோ இல்லை என விளக்கமளிக்கப்பட்டது.
தொலைதூரக் கல்வி மூலம்சட்டப்படிப்பை வழங்க, அண்ணா மலை பல்கலைக்கழகத்துக்கு எந்தவொரு அனுமதியும் வழங்கப் படவில்லை என பல்கலைக்கழக மானியக்குழு தரப்பிலும் தெரி விக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங் களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், அகில இந்திய பார்கவுன்சில் விதிகளை பின்பற்றா மல், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், சட்டப்படிப்புகளை நடத்தமுடியாது எனவும், இந்த படிப்பு களுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்கக்கூடாது எனவும் உத்தர விட்டனர்.
மேலும், ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களை அங்கீகரிக்கப் பட்ட கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சட்டப்படிப்புகளை வழங்கும் போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
சட்டப்படிப்புகளை வழங்கும்போது, அனைத்து பல்கலைக்கழகங்களும் அகில இந்திய பார் கவுன்சில் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago