இஸ்ரோ ஆன்லைன் பயிற்சியில் பங்கேற்ற - மதுரை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு :

By செய்திப்பிரிவு

இஸ்ரோ தேசிய திறனாய்வுப் பயிற்சியில் பங்கேற்ற நிலையூர் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதுரை முதன்மைக் கல்வி அலுவலர் பாராட்டினார்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நடத்திய தேசிய அளவிலான ஆன்லைன் அறிவியல் திறன் பயிற்சியில் பங்கேற்க திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நிலையூர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேர்வாகினர்.

சுற்றுச் சூழல் கல்வியில் புவியியல் தகவல் அமைப்பு பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஆன் லைனில் நடந்த பயிற்சியில், தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி வழிகாட்டுதலின்படி விக்னேஷ்வரி, கே.சீலைக் காரி, வி.சீலைக்காரி, தசாந்தினி, லோகேஸ்வரன், அன்பரசி, சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர். இதையொட்டி விண்வெளி ஆராய்ச்சி மையத்தினர் 7 மாணவ, மாணவிகளையும் பாராட்டி விருதும், நற்சான்றிதழும் வழங்கினர்.

மதுரையில் நடந்த விழாவில் 7 மாணவர்களையும், தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, ஆசிரியைகள் உமா, கவிதா ஆகியோரையும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்