வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகளுக்கு அதிக ஒளியூட்டும் டார்ச்லைட்டுகள் :

By செய்திப்பிரிவு

வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க,உரிகம் பகுதி விவசாயிகளுக்கு அதிக ஒளியூட்டும் டார்ச் லைட்டுகளை வனத்துறையினர் வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உரிகம் வனச்சரகத்தில் ஜோடுகரை, சிவபுரம், நூரொந்துசாமி மலை, ஈரணாதொட்டி, மல்லள்ளி, கெஸ்தூரர், லட்சுமிபுரம், பேல்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்கள் ராகி, சோளம், நிலக்கடலை, துவரை உள்ளிட்ட விவசாய பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், வனவிலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே மாவட்ட வன அலுவலர் பிரபு, இங்குள்ள மக்களுக்கு, மழைவாழ் மக்கள் சங்க நிதியில் இருந்து 75 பேருக்கு, அதிக ஒளியூட்டும் டார்ச்லைட்டுகளை வழங்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து உதவி வனபாதுகாவலர் கார்த்திகாயினி, 75 மலைவாழ் மக்களுக்கு அதிக ஒளியூட்டும் டார்ச்லைட்டுகளை வழங்கினார். இந்நிகழ்வில் உரிகம் வனச்சரக அலுவலர் வெங்கடாசலம், வனவர் பழனிமுருகன், வெங்கசேன், உரிகம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேவய்யா மற்றும் மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்