பிறந்த 8 நாளில் பெண் சிசு கொலை குழந்தையின் பாட்டி கைது :

By செய்திப்பிரிவு

தருமபுரி அருகே, பிறந்த 8 நாளில் பெண் சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் பாட்டி கைது செய்யப்பட்டார்.

தருமபுரி அடுத்த பெரியேரி மோட்டுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி முத்துவேல். இவர் மனைவி தேன்மொழி (27). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கருவுற்ற தேன்மொழிக்கு இருவாரங்களுக்கு முன்பு தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்துக்கு பின்னர், தருமபுரி அடுத்த முத்துக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். குழந்தை பிறந்து 8 நாட்கள் ஆன நிலையில் திடீரென அந்த பெண் சிசு 3 நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளது. குழந்தை உடலை தேன்மொழியின் கணவர் ஊரில் அடக்கம் செய்துள்ளனர். இந்நிலையில், கிராம சுகாதார செவிலியர் இதுபற்றி தகவல் அறிந்து தருமபுரி நகரக் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், பாம்பு கடித்து குழந்தை இறந்ததாக முரணான தகவலை தேன்மொழி குடும்பத்தார் கூறியுள்ளனர். எனவே, குழந்தையின் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு தெரிய வந்ததால் தேன்மொழியின் தாய் உமாவை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்