கரோனாவால் உயிரிழந்த ஊழியர் குடும்பத்துக்கு - ஸ்டெர்லைட் ரூ.5 லட்சம் நிதியுதவி :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் உயிரிழந்த முன்னாள் ஒப்பந்த ஊழியரின் குடும்பத்துக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய எஸ்.வீரக்குமார் என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். அவர் நிறுவனத்துக்கு ஆற்றிய பணியை கருத்தில் கொண்டும், வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் அவரது குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஏ.சுமதி, வீரக்குமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் வழங்கினார்.

வேதாந்தா குழுமம் தனது அனைத்து அலகுகளிலும் ஊழியர்களுக்கு அறிவித்த கரோனா உதவி திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு அவரது ஊதியம் ஓய்வு பெறும் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும்.

மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஓய்வு பெறும் தேதி வரை தொடரும். 2 குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரை கல்வி உதவி வழங்கப்படும் என வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் வீரக்குமார் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஸ்டெர்லைட் அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்