மரக்கன்று நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த - குமரி முதல் தனுஷ்கோடி வரை சைக்கிள் பேரணி :

By செய்திப்பிரிவு

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முதல் தனுஷ்கோடி வரையிலான விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மாலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் 8 இளைஞர்களை அவர் பாராட்டினார்.

சைக்கிள் பேரணி திருநெல்வேலி, தூத்துக்குடி, சாயல்குடி வழியாக தனுஷ்கோடியை அடைகிறது. பேரணியின்போது மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், சாலையோரங்களில் 300 விதைப்பந்துக்கு மேல் தூவப்படுகிறது. முழு உடல்ஆரோக்கியம், புகையில்லா சுற்றுச்சூழல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

சைக்கிள் பேரணிக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட நேரு யுவகேந்திரா, டி.என்.75 சைக்கிள் கிளப் ஆகியவை செய்துள்ளது. மாவட்டஇளையோர் அலுவலர் பாலாஜி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பழனிகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்