இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமுகவினர் நேற்று தியாகிகளின் இல்லத்துக்குச் சென்று அவர்களை கவுரவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் காரை கிராமத்தில் வசித்து வரும் தியாகி கிருஷ்ணசாமி(97). வாலிகண்டபுரம் அருகிலுள்ள வி.ஆர்.எஸ்.புரம் கிராமத்தில் வசித்து வரும் தியாகி போத்தி ராஜன்(96) ஆகிய இருவரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ராணுவத்தில் இணைந்து தேச விடுதலைக்காக போராடியவர்கள்.
இவர்கள் இருவரையும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் குதரத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர்கள் ரஷீத் அஹமது, சையது உசேன், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.களத்தூர் முஹம்மது, மனிதநேய வர்த்தக அணி செயலாளர் சகாபுதீன் மற்றும் விசுவக்குடி ஜக்கரியா ஆகியோர் தியாகிகளின் இல்லத்துக்குச் சென்று பொன்னாடை அணிவித்து, கதர் ஆடைகள் வழங்கி தியாகிகளை கவுரவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago