சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு தனி நலவாரியம் : மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்படுமா? என எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சிறு, குறு தொழில் முனைவோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் சங்கத்தினர் எதிர்பார்க் கின்றனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட குறு மற்றும் சிறுதொழில் முனைவோர் சங்கத்தின் மாவட்டத் தலைவரும், இந்திய சிறு தொழில் சங்கங்கள் கூட்டமைப்பின் தென்னிந்திய வட்டார செயலாள ருமான எம்.வி.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழகத்தில் 9 மாவட்டங்களில் புதிதாக தொழிற்பேட்டைகளை அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் அந்த நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்யவும், நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கவும் ஒரு குழு அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு பெரும் தொழில் நிறுவனங்களிடம் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகைகளை விரைந்து வசூலிப்பதற்காக வழிவகைகளை உறுதி செய்வதற்கான வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தனங்களின் கீழ் அனைத்து மாநில பொதுத் துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களை கொண்டுவர நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனாலும், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதனால், அந்த துறையின் மானிய கோரிக்கை விவாதத்தின் போது இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தொழில் முனைவோர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் குறு தொழில் முனைவோருக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்