‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலி - தி.மலை ஆட்சியர் அலுவலகத்தில் புதிய தேசிய கொடி ஏற்றம் :

By செய்திப்பிரிவு

‘இந்து தமிழ் திசை’ செய்தி எதிரொலியாக திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புதிய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய கொடியை தினசரி காலையில் ஏற்றப்பட்டு, மாலையில் இறக்கப்படுகிறது. இந்திய மக்கள் அனைவராலும் மதித்து வணங்கக்கூடிய தேசிய கொடியை, அதன் கம்பத்தில் சரியாக ஏற்றி பட்டொளி வீசி பறக்கவிட வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனால், தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தேசிய கொடி அவமதிக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியின் சில பகுதிகள் சேதமடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேசிய கொடியை சரியாக கட்டாததால், அதன் முடிச்சு அவிழ்ந்து பறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து புகைப்படத்துடன் ‘இந்து தமிழ் திசை’ நேற்று செய்தி வெளியிட்டது. அதில், தேசிய கொடி அவமதிக்கப்பட்டதற்கு தேச பற்றாளர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதன் எதிரொலியாக, ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று புதிய தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், தேசிய கொடி பட்டொளி வீசி பறந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்