மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம் பிதர்காடு பகுதிக்குட்பட்ட முருக்கம்பாடியை அடுத்த வட்டக்கொல்லி பகுதியில்‌ தேயிலை தோட்டம்‌ வைத்திருப்பவர்‌ சாஜி. இவரது தோட்டம்‌ வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், வன விலங்குகள்‌ வருவதை தடுக்க‌ தோட்டத்துக்குள் மின்வேலி அமைத்துள்ளார்‌. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10 யானைகள்‌ அப்பகுதிக்கு வந்துள்ளன. அதில் ஒரு குட்டி யானை நேற்று அதிகாலை தோட்டத்துக்குள்‌ புகுந்துள்ளது. எதிர்பாராதவிதமாக மின்சாரம்‌ பாய்ந்துசம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. யானை இறந்ததை அறிந்த தோட்ட உரிமையாளர் சாஜி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.

முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் வனத்துறையினர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, வேலியைபற்றியபடியே யானையின் தும்பிக்கை இருந்தது. அதன்தும்பிக்கை மற்றும் வாயிலிருந்துரத்தம் வெளியேறியிருந்தது. இதனால், யானை மின்சாரம் பாய்ந்துஇறந்தது உறுதியானது. வேலிகளில் மின்சாரம் பாய்ச்சுவது வனக்குற்றம் என்பதால், வனத்துறையினர் வழக்கு பதிந்து தோட்ட உரிமையாளர் சாஜியை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்