திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனை முதல்வரை (டீன்)மாற்றக் கோரி, மருத்துவமனை வளாகத்தில் திடீரென செவிலியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, "174 நிரந்தர செவிலியர்கள், 51 ஒப்பந்த செவிலியர்கள், 22 தற்காலிக செவிலியர்கள் பணிபுரிந்து வருகிறோம். பணிக்குவந்தவுடன் உடைமாற்ற இருந்தஅறையை பயன்படுத்தக்கூடாது என்று, மருத்துவக் கல்லூரி முதல்வர் முருகேசன் தெரிவித்தார். செவிலியர்கள் லஞ்சம்வாங்குவதாகவும், மருந்து,மாத்திரைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்வதாகவும் பேசி, செவிலியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
செவிலியர்களுக்கு உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக்கூட பறிக்கும் மருத்துவக் கல்லூரி முதல்வரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும். அவருக்கு துணையாக இருக்கும் உறைவிட மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். வளாகத்துக்குள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இருதரப்பினரிடமும் போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago