மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியதற்கான விருதுக்கு நீலகிரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பான தொண்டாற்றிய மாவட்ட ஆட்சியர், மருத்துவர், வேலைவாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாரா தொண்டு நிறுவனம், சேவை புரிந்த சமூகப்பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்ற பிரிவுகளின் கீழ் விருதுகள் முதல்வரால் வழங்கப்படும்.
அதன்படி இந்தாண்டு சுதந்திரதின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கண்ட பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்.அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகள் நீலகிரி- இன்னசென்ட் திவ்யா, சிவகங்கை- பி.மதுசூதன் ரெட்டி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த நிறுவனமாக திருச்சியில் உள்ள ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டியும், சமூக பணியாளராக நாகர்கோவிலைச் சேர்ந்த மரிய அலோசியஸ் தவமணியும், சிறந்த மருத்துவராக சென்னையைச் சேர்ந்த பூ.பத்மபிரியாவும், அதிகளவு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனமாக சென்னை வி.ஆர்.யுவர் வாய்ஸ் நிறுவனமும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர்கள் தவிர மற்றவர்களுக்கு சுதந்திர தினத்தன்று முதல்வர் விருது மற்றும் ரொக்கத்தொகையை வழங்குகிறார். மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டின் போது வழங்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago