கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி, சூளகிரி ஒன்றியம் மேலுமலை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பீர்பள்ளி. இக்கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வரு கிறது. இப்பள்ளியில் பீர்பள்ளி, கொல்லப்பள்ளி, சின்னபேடனப் பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின் றனர். கரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி செயல்பட வில்லை.
ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வந்து ஆன்-லைன் மூலம் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்களில் மேற்கூரை பழுதாகி பெயர்ந்து விழுவதால் ஆசிரியர்கள் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் இப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சூளகிரி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யாவிடம், பள்ளி தலைமையாசிரியர் ஜெயபாலு கோரிக்கை மனு அளித்தார்.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, மழைக்காலங் களில் வகுப்பறை கட்டிடங்களில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் தேங்கி, சுவரில் வழிந்தோடுகிறது. இக்கட்டிடங்கள் கட்டப்பட்டு 15 ஆண்டுகள் ஆனதால், தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி திறப்பதற்கு முன்பு கட்டிடங்கள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
இந்நிகழ்வின்போது சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உடனிருந்தனர். வகுப்பறை கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றி யக்குழு தலைவர் உறுதியளித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago