தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம்: : நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் :

By செய்திப்பிரிவு

கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம் மூலம் நாட்டுக் கோழி வளர்ப்பு தொழில் முனைவோரை உருவாக்கும் பயிற்சி முகாம் காட்டுப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.

இப்பயிற்சியை செங்கல்பட்டு கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் கு.சாந்தி தொடங்கி வைத்தார். காட்டுப்பாக்கம் அறிவியல் நிலைய பேராசிரியர், தலைவர் ப.இரா.நிஷா நாட்டுக் கோழி வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து பயனாளிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும் பயிற்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த, 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இப்பயிற்சி முகாமில் நாட்டுக் கோழி வளர்க்கும் முறை, பண்ணை அமைப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது. கோழி வளர்ப்பு தொடர்பான குறும்படம் திரையிடப்பட்டது. இதில் வேளாண்மை அறிவியல் நிலையஉதவிப் பேராசிரியர் தேவகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்