உத்திரமேரூரில் தேங்கியுள்ள நெல் குவியல்கள் : நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அங்காளம்மன் கோயில் அருகே தற்காலிக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு உத்திரமேரூர், காக்கநல்லூர், வேடப்பாளையம், காட்டுப்பாக்கம், மேணலூர், பாரதிபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்தநெல்லைக் கொண்டு வந்து விற்பனை செய்தனர். இதில் விவசாயிகளுக்கு ஓரளவு லாபமும் கிடைத்தது.

தற்போது மாவட்டத்தில் சொர்ணவாரி சாகுபடி நடைபெற்று விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை இந்த தற்காலிகநெல் கொள்முதல் மையம் அமைந்த இடத்துக்கு கொண்டுவந்தனர். ஆனால், அங்கு கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை.இதனால் ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகள் பிடிக்கும் அளவுள்ளநெற்குவியல் தேங்கியுள்ளது.அவ்வப்போது மழை பெய்து வருவதால் விவசாயிகள் தார்பாய்களால் நெல்லைப் பாதுகாத்து வருகின்றனர்.

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்போது வரை திறக்கப்படாததால் வேதனை அடைந்த விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை அடைக்க வேண்டி தனியாருக்கு அடிமட்ட விலையில் நெல்லை விற்பனை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உடனடியாக அந்தப் பகுதியில் நெல்கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்