கிரசன்ட் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் - டசால்ட் சிஸ்டம்ஸ் மையம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட்அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி வளாகத்தில் இயந்திரவியல் துறையில் ‘டசால்ட் சிஸ்டம்ஸ்’ எனும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

மாணவர்களின் தனித்துவ திறன் மேம்பாட்டுக்காகவும் படிக்கும் காலத்திலேயே தொழிற்துறைக்கு தயார்படுத்தவும் ‘டசால்ட் சிஸ்டம்ஸ்’ எனும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மாணவர்களுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த வேலை வாய்ப்பு சார்ந்த 2 அடிப்படை மற்றும் 5 மேம்பட்ட 3டி அனுபவ மென்பொருளில் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியின் மூலம்3டி டிசைனர், 3டி இன்னோவேட்டர், ஸ்டைல் இன்ஜினீயரிங், புரொடக்சன் இன்ஜினீயரிங், சிமுலேஷன் இன்ஜினீயரிங் போன்ற30-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் மாணவர்களுக்கு காத்துக்கிடக்கின்றன.

மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பெங்களூரைச் சேர்ந்தஈடிஎஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்துடன் கிரசன்ட் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்