இந்தியாவில் 50 கோடி பயனாளி களை இலக்காக கொண்டுள்ள உலகின் மிகப்பெரிய அரசு நிதியுதவி அளிக்கும் ‘பிரதமர் மருத்துவக் காப்பீடு திட்டம்’, குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை ஒரு வருடத்தில் காப்பீடு வழங் கப்படுகிறது.
இத்திட்டம் இரண்டாம் நிலைமற்றும் மூன்றாம் நிலை மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெறும் செலவுகளை உள்ளடக்கும்.
புதுச்சேரியில் அனைத்து சிவப்பு அட்டைதாரர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளியோர்வீடுகளுக்கேச் சென்று இத்திட்டத் தில் பதிவு செய்வதற்கான நட மாடும் வாகனம் அறிமுகம் செய் யப்பட்டது.
இந்த வாகனத்தை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டப்பேரவை வளாகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா, சுகாதாரத்துறை செயலர் அருண், இயக்குநர் ராமலு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
காரைக்கால் அரசு மருத்துவ மனைக்கான இரு டயாலசிஸ் கருவிகளை இந்நிகழ்வில் முதல் வர் ரங்கசாமி, அமைச்சர் சந்திர பிரியங்காவிடம் ஒப்படைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago