புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் : எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி கடந்த 2014-ம்ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சாலைபாதுகாப்புக் குழு, சாலை பராமரிக் கும் பணியை மேற்கொண்டுள்ளது. அந்தக்குழு உத்தரவின்படி சாலையை ஆக்கிரமித்து வைக் கப்பட்டிருக்கும் கடைகளை பொதுப்பணித் துறையினர் அகற்றி வருகின்றனர்.

அதன்படி, புதுச்சேரி ஆம்பூர் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைத்திருக்கும் பெட்டிக் கடை வியாபாரிகளுக்கு, ஆகஸ்ட்11-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பா ளர்கள் கடைகளை தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்த வேண் டும், இல்லையெனில் நடவடிக்கை எடுத்து பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும், அவர்கள் அகற்றவில்லை.

இந்நிலையில் நேற்று புதுச்சேரிவட்டாட்சியர் குமரன், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஏழுமலை, உதவி பொறியாளர் துளசிங்கம், இளநிலை பொறியாளர் தேவதாஸ் உள்ளிட்ட அதிகா ரிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஆம்பூர் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புக் கடைகளை கிரேன் இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள், மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்கக்கோரி பணியை தடுக்க முயன்றனர். சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து ஆம்பூர் சாலை பகுதியில் இருந்த 14 ஆக் கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.

இதுதொடர்பாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதுச்சேரியில் கடந்த இரண்டுஆண்டுகளுக்கு முன்பே ஆக்கிர மிப்பு அகற்றும் பணியை தொடங்கிமேற்கொண்டு வருகிறோம். இடையே கரோனா தொற்று காரணமாக இப்பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது ஆம்பூர் சாலையில் இருந்த ஆக்கிமிப்புகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் எஞ்சியுள்ள 14 கடைகள் இன்று (நேற்று) அகற்றப்பட்டது. தொடர்ந்து புதுச்சேரி ரயில் நிலை யம் எதிரே உள்ள சாலை உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்