பண்ருட்டி வட்டாட்சியர் அலுவ லக காத்திருப்போர் கூடம் உபயோகமற்ற பொருட்களின் கிடங்காக மாறிப்போனதால் அலுவலத் திற்கு வரும் பயனாளிகள் மரத்தடி யிலும், சுற்றுச்சுவர் அருகிலும் காத்திருக்கும் நிலை தொடர்கிறது.
பண்ருட்டி வட்டாட்சியர் அலுவ லகம் கெடிலம் ஆற்றங்கரை பகுதியில் அமைந்துள்ளது. 99 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பண் ருட்டி வட்டத்தில் பட்டா மாற்றம், நில அளவீடு, சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட தேவைகளுக்காக அலுவலக நாட்களில் 100-க்கும் மேற்பட்டோர் மனுக்களுடன் வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வரும் கிராம மக்கள் சற்று ஓய்வெடுக்கவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும், காத்தி ருப்போர் கூடமும் அதையொட்டி கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் கழிப்பறை கட்டப்பட்டு ஒரிரு வாரங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளது. அதன் பின் அவை பராமரிப்பின்றி யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் கிராம மக்கள் திறந்தவெளியை பயன் படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் காத்திருப்போர் கூடமும் மக்கள் பயன்பாட்டிற்கு அல்லாமல் சேதமடைந்த டேபிள்,நாற்காலி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை போட்டு வைக்கும்இடமாக மாற்றி பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் வட்டாட்சியர் அலுவல கத்துக்கு வரும் மக் கள் மரத்தடி நிழலிலும், அலுவலக சுற்றுச்சுவர் மீது அமர்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமும் அலுவலகத்திற்கு வந்து செல்லும் வட்டாட்சியர் உள்ளிட்ட இதர அலுவலர்கள் யாருக்கும், மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட காத்திருப்போர் கூடத்தை ஏன் இவர்கள் பயன் படுத்த வில்லை? என்ற கேள்வி எழாதது ஏன் என்பது புரியவில்லை.
அண்மையில் அலுவலகத்தைசுற்றியிருந்த மரங்கள் வெட்டப் பட்டதற்கு, அலுவலத்தைச் சுற்றிலும் புதர் மண்டிக் கிடந்ததால் அதனை வெட்டினோம் என காரணம் கூறிய அலுவலர்கள், அதே மரத்தடியில் காத்திருக்கும் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையை சுத்தம்செய்து, அவை எந்த நோக்கத் திற்காக கட்டப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை கிராம மக்களின் எதிர்பார்ப்பு.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago