கல்வே காலேஜ், வஉசி பள்ளிகள் ரூ.7.61 கோடியில் புணரமைப்பு : மும்பை தனியார் நிறுவனம் பணிகளை மேற்கொள்கிறது

By செய்திப்பிரிவு

புதுச்சேரி கல்வே காலேஜ், வ.உ.சி. ஆகிய இரு பள்ளிகளையும் ரூ.7.61 கோடியில் புரணமைப்பதற்கான பணி ஆணை மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு விரைவில் வழங்கப்படும் என்று ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சி நிறுவனத்தின் 19-வது நிர்வாக இயக்குநர்களின் கூட்டம் நேற்று தலைமை செயலர் அஸ்வனிகுமார் தலைமையில் தலைமை செயலத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்வே காலேஜ் பள்ளியை புணரமைத்தல், வ.உ.சி. பள்ளியை புணரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவ்விரு பள்ளி கட்டி டங்களின் பாதுகாப்பின்மையை கருதி 4 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்பாரம்பரிய கட்டிடங்களை புணர மைக்கும் பணி ரூ.5.05 கோடி திட்ட மதிப்பில் கல்வே காலேஜ் பள்ளியை புணரமைத்தல் மற்றும் ரூ.2.81 கோடி திட்ட மதிப்பில் வ.உ.சி. பள்ளியை புணரமைத்தல் ஆகிய பணிகளை தொடர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு ஒப்பந்ததாரர்கள் இப்பணிக்கான ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்த நிலையில், மும் பையை சேர்ந்த சவானி ஹரி டேஜ் கன்சர்வேஷன் என்னும் தனியார் நிறுவனம் கல்வே காலேஜ் பள்ளியை புணரமைக்க ரூ.4,80,55,386 மற்றும் வ.உ.சி. பள்ளியை புரணமைக்க ரூ.2,81,22,462-க்கும் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பித்தது.

எனவே, அந்த நிறுவனத்துக்கு பணி ஆணை விரைவில் வழங்கப் பட்டு கல்வே காலேஜ் பள்ளி மற்றும் வ.உ.சி. பள்ளியின் புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 முதல் 16 மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, பள்ளிகள் விரைவில் திறக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்