விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிக்கு பெண் ஆராய்ச்சியாளர்கள் விருது :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரிக்கு பெண் ஆராய்ச்சியாளர்கள் விருது வழங்கப் பட்டது.

சர்வதேச புத்தாக்க பொறியியல் மற்றும் நிர்வாக ஆய்விதழும், எல்செவியர் ஆய்வு வெளியீட்டு நிறுவனத்தின் சமூக அறிவியல் ஆராய்ச்சி வலை அமைப்பும் இணைந்து 2021 ம் ஆண்டிற்கான (IJEMR- ELSEVIER SSRN) ஆராய்ச்சி விருதுகளை வழங்கியது. இவ்விருது பல்வேறு பிரிவுகளில் சிறந்த ஆளுமைகள் தேர்ந்தேடுக்கப்பட்டு வருடந் தோறும் வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2021-ம் ஆண்டிற்கான விருதுகள் விஜயவாடாவில் வழங் கப்பட்டது. சிறந்த கல்வியாளர் விருதினை தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் உயிர் வேதியியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்ரீதேவி, சிறந்த பெண் ஆராய்ச்சியாளர் விருதினை ஆராய்ச்சி புல முதன் மையர் மற்றும் உயிர் வேதியியல் துறையின் பேராசிரியர் கலைமதி, இளம் ஆராய்ச்சியாளர் விருதினை கல்லூரியின் உயிர்வேதியியல் துறையின் முன்னாள் முதுகலை மாணவி மாலினிதேவி ஆகியோர் பெற்று கல்லூரிக்கு சிறப்பு சேர்த் தனர். இவர்களுக்கு கல்லூரியின் நிர்வாகத்தின் சார்பில் செயலாளர் செந்தில்குமார், (ESSK) இஎஸ் எஸ்கே கல்விக்குழுமத்தின் பதிவா ளர் செளந்தரராஜன் கல்லூரி முதல்வர் பிருந்தா ஆகியோர் வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்