பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து அலைபேசியில் தகவல் அளிக்கலாம் : மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் கூறியதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மதுரை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு 15 வட்டார வள மையங்களில் ஆக.10 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 6 முதல் 19 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் வகையில் வீடு வீடாகச் சென்று கண்டறிந்து, கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணியில் அனைத்து வட்டார, குறுவள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள்,இயன்முறை பயிற்சி யாளர்கள், சிறப்பாசிரி யர்கள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். அதனையொட்டி தங்கள் பகுதியில் உள்ள பள்ளி செல்லா குழந்தைகளை கண்டால் 97888 58746, 97888 58747 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்