உள்ளாட்சி தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக பாஜக சார்பில் 75-வது சுதந்திர தினத்தை `மகிழ்ச்சி திருவிழா'வாக கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன், ‘மக்கள் ஆசி யாத்திரை’ என்ற யாத்திரையை மேற்கொள்ள இருக்கிறார். ஆகஸ்ட் 16-ம் தேதி காலை கோவையில் இந்த யாத்திரையை தொடங்கும் அவர் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் 3 நாட்கள் பயணிக்கிறார். அதிமுக – பாஜக கூட்டணி வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள பாஜக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக் கப்பட்டதும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சு நடத்துவோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago