பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஓட்டுநர்கள் வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரியில், மாவட்ட அனைத்திந்திய தனியார் வாகன ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நலச்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மண்டல, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடாஜலம் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் ஜெயகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாநில நிறுவன தலைவர் அரளி.குணசேகரன், அமைப்பு செயலாளர் ரமேஷ், மாநில, மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபி (எ) கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கி பேசினர். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு ஓட்டுநர் அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்தல். ஓட்டுநர் சேவை மையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட பொருளாளர் இணையத்கான், மாவட்ட துணை செயலாளர் சின்னமணி, மாவட்ட துணை தலைவர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்