தூத்துக்குடியில் காவல் துறையினர் - சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் காவல் துறையினர் சுதந்திர தின அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்றுக்கு மத்தியில்நாட்டின் சுதந்திர தினவிழா வரும்15-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிஇவ்விழாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா வரும் 15-ம் தேதிதருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கலந்து கொண்டு, தேசிய கொடியேற்றி காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இதனை முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் காவல் துறை ஆயுதப்படையினர் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். வரும் 15-ம் தேதி கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்த அளவிலான மக்கள் பங்கேற்புடன் சுதந்திர தின விழா நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்