மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த ஆண்டு நவ.26-ம் தேதி முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, அவர்களை ஊக்கப்படுத்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சாவூரில் இருந்து 38 விவசாயிகளும், கும்பகோணத்திலிருந்து 150 விவசாயிகளும் சோழன் விரைவு ரயில் மூலம் நேற்று சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். பின்னர், அங்கிருந்து டெல்லிக்குச் செல்கின்றனர்.
முன்னதாக, தஞ்சாவூரிலிருந்து விவசாயிகளை வழியனுப்பும் நிகழ்வுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீர.மோகன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி, பொருளாளர் நா.பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றியச் செயலாளர் சீனி.முருகையன் மற்றும் ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல, டெல்லி போராட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவசூரியன் தலைமையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 35-க்கும் அதிகமான விவசாயிகள் நேற்று திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டனர். அவர்கள் வைகை ரயில் மூலம் சென்னைக்குச் சென்று, அங்கிருந்து டெல்லிக்குச் செல்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago