ஹைட்ரோகார்பனுக்கு எதிராக போராடிய விவசாயிகளை - வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நேற்று கூறியது:

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஹைட்ரோகார்பன், மீத்தேன், ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில், நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை என்ற பெயரில் விவசாயிகளுக்கு பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. எனவே, வழக்கு தள்ளுபடி என தமிழக அரசு அறிவித்த நாள் முதல், அதற்கான அரசாணை பிறப்பித்து, விவசாயிகளை வழக்கில் இருந்து முழுமையாக மீட்டெடுக்க முன்வர வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் யூரியா, பொட்டாஷ், டிஏபி போன்ற உரங்களுக்கு மிகப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கு உரிய காலத்தில் தேவைக்கு ஏற்ப மத்திய அரசு உரங்களை ஒதுக்கீடு செய்கிறதா? அல்லது பாரபட்சம் காட்டுகிறதா? என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும், மத்திய அரசிடமிருந்து தேவையான உரங்களைப் பெற்று, மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்