தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி பெறியாளர் சுகதா ரஹாமா மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தூத்துக்குடி தெற்கு கடற்கரைச் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி சோதனையிட்டனர்.
அந்த லாரியில் தடை செய்யப்பட்ட கடல் சிப்பிகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. கடல் சிப்பிகளுடன் லாரி மற்றும் அதில் இருந்த 2 பேரை அவர்கள் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மத்திய பாகம் போலீஸார் லாரி மற்றும் அதில் இருந்த 10 டன் எடையுள்ளகடல் சிப்பிகளை பறிமுதல் செய்தனர். லாரியின் ஓட்டுநரான குலசேகரன்பட்டினம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்ததுரைராஜ் (40) மற்றும்லாரி உரிமையாளரான கல்லாமொழி வடக்குத் தெருவைச்சேர்ந்த லட்சுமணபாண்டியன் மகன் இசக்கி முத்து (32) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago