தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் முத்துலெட்சுமிபுரத்தைச் சேர்ந்த மந்திரம் மகன் மகாராஜன். இவரை பெண் என நினைத்து ஆயிரக்கணக்கானோர் செல்போன் எண்ணில்தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசி திட்டிள்ளனர்.
இதுபற்றி மகாரஜன் கேட்டதற்கு, ‘முகநூலில் பெண்ணின் புகைப் படத்துடன் அவரது செல்போன் எண்ணை இணைத்து பதிவு செய்துள்ளதாகவும், அதைப் பார்த்துதான்தொடர்பு கொண்டதாகவும் கூறியுள்ளனர்.
முகநூலை பார்த்தபோது அது உண்மையென அறிந்த மகாராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதுதொடர்டாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சைபர் குற்றப்பிரிவு போலீஸாருக்கு எஸ்பி ஜெயக்குமார் உத்தர விட்டார்.
அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி மாவட்டம், வடக்குப் பேய்குளத்தைச் சேர்ந்த நடராஜன் மகன் முத்துக்கிருஷ்ணன் (27) என்பவர் பிரச்சினைக்குரிய போலி முகநூல் கணக்கு தொடங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கும், மகா ராஜனுக்கும் ஏற்கனவே பகை இருந்ததாக தெரிகிறது.
அதன் காரணமாக அவருக்கு இடையூறு விளைவித்து களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் பெண்ணின் புகைப்படத்துடன், மகா ராஜனின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு போலியாக முகநூலில் பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து முத்துக் கிருஷ்ணனை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago